Posts

*மாதிஹுர்ரசூல் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு*

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் ஒரு கல்லூரி உள்ளது. அதனை சுருக்கமாகவோ செல்லமாகவோ அப்பா காலேஜ் என்று தான் அழைப்பர். அந்த அப்பா வேறு யாருமல்ல நம் ஸதகத்துல்லாஹ் அப்பாவேதான். வலிமார்களை அன்பொழுக அப்பா என்றழைக்கும் நடைமுறை நம்மிலே இருந்தாலும் கூட அப்பா என்று கூறப்பட்டால் அது ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்களையே குறிக்கும் என்பது நாம் குறித்து வைக்க வேண்டிய செய்தி.  காயல்பட்டணத்தில் மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் காமில் வலி அஷ்ஷெய்கு சுலைமான் வலியுல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர் களுக்குப் பிறந்த ஐந்து ஆண் மக்களுமே அவ்லியாக்கள் என அறியப்பட்டவர்கள். அவர்களில் மூன்றாம் மகனாக தோன்றியவர்களே இமாம் ஸதகத்துல்லாஹ் அப்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.  அவர்கள் பெயராலேயே ஒரு கல்லூரி இயங்கி வருவது நம் இதயங்களை இன்புறச் செய்யும் இனியசெய்தி. காயல்பட்டணத்தில் பிறந்தார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே சீர் மறைக்குர்ஆன் முழுவதையும் சிந்தையில் நிறுத்தி சிறப்புற்றார்கள்.  அதிராம்பட்டணத்தைச் சார்ந்த சின்னீனா லெப்பை ஆலிம் எனும் சீலரிடம் மேல் கவியைக் கற்றார்கள்.  மேலப்பாளையைத்தைச் சார்ந்த மர்யம் எனும் ...

குர்பானியின் சட்டங்கள்

“துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களைவிட அல்லாஹுதஆலாவுக்கு மிக உவப்பானதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.  (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரீ) “இறைவனுக்காக வணக்கம் புரிய துல்ஹஜ்ஜின் பத்து நாட்களைவிட சிறந்த காலம் ஏதுமில்லை. அந்நாட்களில் ஒரு நாள் நோன்பு வைப்பது வருடம் முழுவதும் நோன்பு வைத்ததற்கு நிகராகும். மேலும் அந்நாட்களில் இரவுகளில் ஓரிரவு வணக்கம் புரிவது லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கிய தற்கு நிகராகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளி யுள்ளார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ, இப்னு மாஜா). துல்ஹஜ் ஒன்பதாம் நாள் “அரஃபாவின் நோன்பு (துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு) நான் அல்லாஹ்வின் மீது “அவன் அந்நாளின் முந் தைய ஆண்டு, பிந்தைய ஆண்டு (இரு ஆண்டின்) பாவங் களுக்கு பரிகாரமாக ஆக்குவான்” என்று ஆதரவு வைக்கி றேன்” என நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் பகன்றுள் ளார்கள்.     (அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி), நூல் : முஸ்லிம்) துல்...

குர்பானியின் சட்ட திட்டங்கள்

ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிகமானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும். குர்பானியின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன். குர்பானியின் பின்னணி  ( சுருக்க வரலாறு) நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்ப வத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும்.  இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள். “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்:  “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான...

வஸீலா – ஒரு ஆய்வு!

*இறைநேசர்களை அவமதிக்கும் வஹ்ஹாபிய மூடர்களின் கவனத்திற்கு......* வஸீலா என்பதற்கு அரபியில் இஸ்திம்தாது, இஸ்திகாதா, இஸ்திஷ்ஃபா, இஸ்திஆனா என்று பல சொற்களைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கருத்திலும் அர்த்தத்திலும் ஒன்றுதான். மார்க்கச் சட்டவிதிப்படி பதவி உயர்ந்த ஒன்றின் பொருட்டினால் அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு வஸீலா எனக் கூறலாம். அல்லாஹ்விடத்தில் நல்லமல்களும், நல்லடியார்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்பிற்குரித்தான பொருட்களாகும். இதனால்தான் இரண்டைக் கொண்டும் வஸீலா தேடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்ப்போமானால் நற்கருமங்களோ, துஆவோ வஸீலாவாக மாட்டாது. காரணம் துஆவும், நற்கருமங்களும் ஒரு நபரைக் கொண்டு நிகழ்த்தப்படுபவை. எனவே துஆவும், நற்கருமங்களும் நிகழ்ச்சியாகும். இனி நிகழ்ச்சியை நிகழ்த்தும் மனிதனை விட நிகழ்த்தப்பட்ட அந்நிகழ்ச்சிகள் உயர்வானதெனக் கருதப்படுமாயின், இறைவனது செயல்கள் உயர்வானதாகக் கருதப்பட்டு இறைவன் அச்செயலை விட தாழ்ந்தவனாக கருதப்பட்டுப் போய்விடுவான். இவ்வாறே நபிமார்கள், வலிமார்கள் எந்தச் சிறப்பையுமுடையவர்கள் அல்ல. அவர்கள் வஸீலாவாக மாட்டார்கள். அவர...