சமூக நலன் காப்போம்..
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الحمدُ للهِ وَلِيِّ كُلِّ نعمةٍ ، وَصَلَّى اللهُ عَلَى رَسُولِهِ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمةِ ، وعَلَى آلِهِ وأصْحابِهِ خِيَارِ الأمَّةِ وسَلَّمَ تَسليماً كَثيراً உலக மக்கள் அனைவராலும் போற்றப்படக்கூடிய ஒரே மார்க்கம், நம் இஸ்லாமிய மார்க்கம் தான். அண்ணலாரின் ன்வாழ்க்கை நெறியை பார்த்து வியந்து அதில் பல ஆராய்ச்சிகளை செய்து, அதில் வியந்து அண்ணலாரை போற்றி புகழ்ந்து இஸ்லாத்தை தழுவிய பல அறிஞர்களின் வரலாறுகள் பல உண்டு. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைகள் அனைத்துமே இவ்வுலகில் ஒற்றுமையுடன் வாழும் அழகிய வாழ்கையை கற்றுத்தரக்கூடியது வலியுறுத்தக் கூடியது.. குடும்பத்துடன் இணங்கி வாழ வேண்டும், அண்டை வீட்டாருடன் இணைந்து வாழ வேண்டும், ஒருவருக்கொருவர் உதவிசெய்து வாழ வேண்டும், சொந்தங்களுடன் சேர்ந்து வாழவேண்டும், முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும், வாழும் நாட்டின் மேல் பற்றுடன் வாழவேண்டும், பிற மத சகோதரர்களுக்கும் உதவிசெய்து வாழ வேண்டும் . என்று எண்ணற்ற போதனைக...