மய்யித்
👇👇 கேள்வி 👇👇 மனிதன் இறந்ததிலிருந்து அடக்கம் செய்து முடிக்கப்படும் வரை மைய்யத் வேதனை செய்யப்படுமா?❓❓❓ 1314. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்.” அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள் 💥💥💥💥 1338. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?“ எனக் கேட்பர். அதற்கவன் “இவர் அல்...