Posts

Showing posts from February, 2026

புனித பராஅத் இரவும் நமக்கான விளக்கமும்

அல்லாஹ்வின் பேரருளால் புனிதமான ஒரு இரவில் அல்லாஹ்வின்  பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.  இந்த பாக்கியத்தைக் கொடுத்த வல்ல இறைவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். நிஸ்ஃபு ஷஃபான் என்று சொல்லப்படுகின்ற புனிதமான பராஅத் இரவில் நாம் இங்கே ஒன்று கூடி இருக்கிறோம்.  இன்றைக்கு சிலர் பராஅத்தே கிடையாது. அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குர்ஆனிலோ ஹதீஸிலோ அதற்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை, ஆதரங்களும் இல்லை, இதுவெல்லாம் பித்அத், மார்க்கத்தில் இல்லாத காரியங்கள், மார்க்கம் இதை வழிகேடு என்று சொல்கிறது.  இமாம்கள் மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துச் செல்கிறார்கள் என்றெல்லாம் மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்.  எனவே இந்த பித்அத்தைக் குறித்த தெளிவை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த இரவில் இதைப் பற்றி ஏன் பேச வேண்டும். இப்போது இதை பேச வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் நினைக்கலாம். இதைப்பற்றி இப்போது தான் பேச முடியும்.  ஏனென்றால், இன்றைக்கு பராஅத் என்ற வார்த்தையே பல பேருக்கு அலர்ஜியாக இருக்கிறது. அந்த வார்த்தையைக் கேட்டவுடனே அவர்கள் சொல்லக்கூடிய முதல் வா...