குர்பானியின் சட்டங்கள்
“துல்ஹஜ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படுகின்ற நற்செயல்களைவிட அல்லாஹுதஆலாவுக்கு மிக உவப்பானதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரீ) “இறைவனுக்காக வணக்கம் புரிய துல்ஹஜ்ஜின் பத்து நாட்களைவிட சிறந்த காலம் ஏதுமில்லை. அந்நாட்களில் ஒரு நாள் நோன்பு வைப்பது வருடம் முழுவதும் நோன்பு வைத்ததற்கு நிகராகும். மேலும் அந்நாட்களில் இரவுகளில் ஓரிரவு வணக்கம் புரிவது லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்கிய தற்கு நிகராகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளி யுள்ளார்கள். (அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ, இப்னு மாஜா). துல்ஹஜ் ஒன்பதாம் நாள் “அரஃபாவின் நோன்பு (துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாளின் நோன்பு) நான் அல்லாஹ்வின் மீது “அவன் அந்நாளின் முந் தைய ஆண்டு, பிந்தைய ஆண்டு (இரு ஆண்டின்) பாவங் களுக்கு பரிகாரமாக ஆக்குவான்” என்று ஆதரவு வைக்கி றேன்” என நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் பகன்றுள் ளார்கள். (அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி), நூல் : முஸ்லிம்) துல்...