குர்பானியின் சட்ட திட்டங்கள்
ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிகமானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும். குர்பானியின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள். குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகிறேன். குர்பானியின் பின்னணி ( சுருக்க வரலாறு) நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்ப வத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள். “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான...